Saturday, December 25, 2010

சின்ன குருவி போடும் "வாழ்க்கை" அரிசி

சின்ன குருவிகளின் வாழ்க்கை கூட
நமக்கு சிலநேரம் தன்னம்பிக்கை
வளர்க்கும் ! - அதற்கு இந்த பாடல்
மிக சிறந்த உதாரணம் !

(மூலம் : தவமாய் தவமிருந்து தமிழ் திரைப்படம்.
கீழே ஓடி கொண்டிருக்கும் பாடல் வரிகளை
நிறுத்தி படிக்க - சுட்டெலி புள்ளியை வரிகளின்
மீது நிறுத்துங்கள் !)




அந்த உருண்டை மலை ஓரத்துல
உருண்டை மலை ஓரத்துல
உருண்டை மலை ஓரத்துல - நான்
உளுந்து காய போட்டுருந்தேன் ..தேன்... ன்!
அந்த உளுந்த உருட்டி அள்ளும் முன்னே
அந்த உளுந்த உருட்டி அள்ளும் முன்னே
இந்த சண்டாள சீமையிலே
இன்னைக்கு உறுமி சத்தந்தான்
கேட்டதென்ன ...?

ஏ ...... "ஆ"க்காட்டி "ஆ"க்காட்டி
எங்கெங்கே முட்டை இட்ட ?
எங்கெங்கே முட்டை இட்ட ?
எங்கெங்கே முட்டை இட்ட ?

குருவி :
நான் கல்லை தொளைச்சு
கரு மலையில் முட்டை இட்டேன் !
கரு மலையில் முட்டை இட்டேன் !
கரு மலையில் முட்டை இட்டேன் !

நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூணு குஞ்சு !
அய்யா ! - நான் இட்டது நாலு முட்டை
பொரிச்சது மூணு குஞ்சு !

அந்த மூணு குஞ்சுல - மூத்த
குஞ்சுக்கு இரை தேடி மூணு மலை
சுத்தி வந்தேன் ! - நடு
குஞ்சுக்கு இரை தேடி நாலு மலை
சுத்தி வந்தேன் !

இளைய குஞ்சுக்கு இரை தேட
போகையிலே போகையிலே
போகையிலே ... லே !
என்ன கானாங்குரத்தி மகன்
அய்யா ! - என்ன கானாங்.....ங் ......
குரத்தி மகன் - கண்டிருந்து
கன்னி போட்டான்
என்ன கானாங்குரத்தி மகன்
கண்டிருந்து கன்னி போட்டான் !

என் காலு ரெண்டும் கன்னிக்குள்ளே
ரெக்கை ரெண்டும் மாரடிக்க
ரெக்கை ரெண்டும் மாரடிக்க
ரெக்கை ரெண்டும் மாரடிக்க
நான் பெத்த மக்கா - நான்
அழுத கண்ணீரு ஆறா பெருகி
ஆனை குளிப்பாட்ட - குளமா
பெருகி குதிரை குளிப்பாட்ட
ஏரி பெருகி எருது குளிப்பாட்ட
பள்ளம் பெருகி பன்னி குளிப்பாட்ட
நான் பெத்த.....அ ... மக்கா
நான் பெத்த மக்கா -உங்கள
பாதியில விட்டு - நான் இப்போ
பரலோகம் போறேனே
போறேனே போறேனே !

ஏழ குருவியே நீ ஏங்கி அழ கூடாது !
கத்தும் குருவியே நீ கதறி அழ கூடாது !
ஏழ குருவியே நீ ஏங்கி அழ கூடாது !
கத்தும் குருவியே நீ கதறி அழ கூடாது !
வலை என்ன பெருங்கனமா ?
அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா !
வலை என்ன பெருங்கனமா ?
அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா !

சின்ன குருவியே நீ சிணுக்கி அழ கூடாது
நொய் குருவியே நீ நொந்து அழ கூடாது !
சின்ன குருவியே நீ சிணுக்கி அழ கூடாது
நொய் குருவியே நீ நொந்து அழ கூடாது !
அலகெனும் அரிவாளால் - இந்த
வலையினை அறுத் தெரிவோம்
அலகெனும் அரிவாளால் - இந்த
வலையினை அறுத் தெரிவோம்

வலியும் வேதனையும் வலையோடு
போயிடுச்சு - வாழ்க்கை என்னான்னு
போராடி தெருஞ்சிருச்சு !
வலியும் வேதனையும் வலையோடு
போயிடுச்சு - வாழ்க்கை என்னான்னு
போராடி தெருஞ்சிருச்சு !

வாங்க பறந்திடுவோம் - என்
குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம் !
வாங்க பறந்திடுவோம் - என்
குஞ்சுகளா வாங்க பறந்திடுவோம் !




Thursday, December 23, 2010

நுண்ணறிவு சோதனை - படகோட்டி காட்டுங்கள்




விதி முறைகள் :(விளையாட்டை தொடங்க நீல வண்ண வட்ட  பொத்தானை அழுத்தவும் )
௧. படகு இரண்டு பேரை மட்டுமே சுமக்கும் !
௨. தந்தையால்  , தாய் இல்லாமல் மகள்களோடு இருக்க முடியாது 
௩. தாயால் , தந்தை இல்லாமல் மகன்களோடு இருக்க முடியாது 
௪. காவலர் இல்லாமல் திருடனால் குடும்பத்தினரோடு இருக்க முடியாது 
௫. தாய் , தந்தை , காவலர் இவர்களுக்கே படகை செலுத்தத் தெரியும் 

யாரை படகில் ஏற்ற நினைக்கிறீர்களோ அவர்கள் மீது சுட்டெலி கொண்டு 
இடது அழுத்தம் கொடுத்தால் போதும் ! படகை செலுத்த எதிர்முனையில் 


உள்ள சிவப்பு உருண்டை பொருத்தப்பட்ட குச்சியினை அழுத்தவும் !

Here are the rules:
1. The raft can carry only 2 people.
2. The father can not be left with any of the daughters unless the mother is present
3. The mother can not be left with any of the sons unless the father is present.
4. The criminal can not stay with any family member unless the guard is present.
5. Only the father, mother, and guard know how to use the raft.
Click on the characters to move them on/off raft. Click the red control ball to send the raft across the river.
(I got this game through one of my NIT-Trichy friends via email. Later I solved it. Today while
surfing flash and Active X games I came across this again.)

For Answers and More puzzles (There You can have a look at my answers too!)

Monday, December 20, 2010

அம்மா - அன்பின் அடையாளம்

கடவுள் பற்றி ஆயிரம் சர்ச்சைகளும்
குழப்பங்களும் , சண்டைகளும்
காலங்காலமாய் நிகழ்ந்த வண்ணம்
இருந்தாலும் - அன்னையின்
கடவுள் தன்மை பற்றி - அவள்
அன்பின் புனிதம் பற்றி
அணு அளவு சந்தேகம் - உலகின்
எந்த மூலையிலும் எழப்போவதில்லை !

முற்றும் துறந்த முனிவன் கூட - தாயின் தேகம் 
பற்றி எரியபோவதை தாங்க இயலாது 
கண்ணீர் விட்ட உண்மை  கதை உண்டு !
சமீபத்தில் நிகந்த - எனை மிகவும் 
பாதித்த மரணம் - எனக்குள் 
வார்த்தைகள் இல்லை ! - இடைவிடாது 
ஏதாவது சிந்திக்கும் மனசு கூட 
எனக்காக - நான் துயர் மீள 
வேண்டும் என 
மௌனம் கொண்டு நிற்கிறது !
தாய் குருவி ,திரும்பாத ஊர் 
போய்விட்ட நிலையில் - துடிக்கும் 
இந்த பிள்ளை குருவிகள் 
மன சாந்தி கொள்ளட்டும் !

திடீரென வந்து நம் வாழ்வை 
திருடி கொண்டு போகும் 
மரணத்தின் பிடியில் - நாமும் 
தப்பிவிட போவதில்லை ! 
இனி நேரம் ஓட்டி விளையாடி 
பொன்னான வாழ்வதனை 
வீண் செய்யும் போக்கு - நம் 
நினைவிலிருந்தே அழியட்டும் !

கணப்பொழுதில் கனவாய் 
மறைந்து - என் நிஜங்களில் 
ஏற்றுக் கொள்ள முடியாததாய் 
போய்விட்ட -உங்கள் 
இனிய வாழ்வு - என் இதயத்தில் 
புகை மூட்டி - கண்களில் நீர் வார்பதால் 
உங்களுக்கு இரங்கற்பா பாட முடியாது 
இந்த பாவியால் ...
என்றேனும் நான் ஏற்று கொள்கிற 
துணிச்சல் வரும் போது - உங்களை 
போற்றி என்னை புனித படுத்தி கொள்வேன் !
இந்த பாடல்கள் - உடல் துறந்து 
அமரத்துவம் எய்திய அந்த 
ஆன்மாவிற்கு சமர்ப்பணம் ...!






























Thursday, December 16, 2010

எளிமை ! இனிமை ! ஒருமை!

வாழ்வின் உன்னதம்




காபி வித் அணு - சத்குரு ஜகி வாசுதேவ்
பகுதி 1

பகுதி 2


பகுதி 3


பகுதி 4


பகுதி 5


பகுதி 6

Monday, December 13, 2010

இங்கே நானும் நீ கொடுத்த தனிமையும் சுகம்!


நான் புறப்படும் போது
உனக்கு பதிலாய் - எனக்கு
துணையாய் நீ அனுப்பி
வைத்த தனிமை
உன்னை போல் - என்னிடத்தில்
அக்கறை காட்டுவது
இல்லையடி !

ரகசியமாய் இது பற்றி
புகார்களை ஒப்புவிக்க
அழகு மாவிலை தொங்கல்
மின்னும் உன் தங்க
காதுகள் அருகில் இல்லையடி!

என் உயிர் வளர - என்
ஆழத்து வேர்களில் - உன்
உயிர் ஊற்றி வந்தாய் !
வாட நினைத்த போதெல்லாம்
வாடாத மலர் முகம்
காட்டி மலர்ச்சி கொடுத்தாய் !
இந்த தனிமை...
ஆழ குழி பறித்து - என்
மொத்த நீரையும் உறிஞ்சி
அங்கே பாய்ச்சி கொள்கிறது !
மலர்ந்து இதழ்கள்
விரியும் போதெல்லாம் - எங்கோ
போய்க் கொண்டிருந்த
பெருங்காற்றை என் பக்கம்
திருப்பி விடுகிறது !

இரவு போர்வை போர்த்தி
அமைதி கொள்ளும் - வண்ண
பூமியாய் தூங்கி வந்தேன் - நீ
"இனிய இரவு" குறுஞ்செய்திகள்
அனுப்பிய அந்த நாட்களில் !
இன்று .......
நடு நிசி கடந்த பின்னும் - மூட
நினைத்திடும் விழிகளை
திறந்து பார்த்து விளையாடுகிறது
நீ அனுப்பி வைத்த தனிமை !

உன் நேரத்தை எனக்காய்
செலவிட்டவள் நீ - எனக்கான
என் நேரத்தை கொஞ்சமாவது
இந்த தனிமை மிச்சம்
வைத்தால் போதுமடி !

காதலில் முன் அனுபவம்
கொண்டவன் இவன் என்றும்
உன்னை கூட நாளை இவன்
ஏமாற்ற கூடும் என்றும்
உண்மையான அக்கறை
மொழிகள் கேட்ட பின்னும்
ஏனோ நீ உதற மறுத்தாய் !
வேரோடு பிடுங்க பட்ட
இடத்தின் வேதனைதான்
உணர்ந்தாயோ ?!- இங்கு பாரடி
கூடவே இருந்தும் - இந்த
தனிமை ஒவ்வொரு
நொடியும் தனியனாக - எனை
உதறி கொண்டிருக்கிறது !

மெரீனா கடற்கரையில்
தனிமையோடு - தனியாக
நான் அமர்திருந்தும்
காதலர்களாக எங்களை
சந்தேகித்து இருக்காது
இந்த உலகம் ! - நானும்
நீயும் ஓர் நாள் கூட
அந்த காதல் கடல் காற்று
வாங்கியதில்லையே ! - நம்மை
காதலர்களாக ஏற்று கொள்ளுமா
இந்த உலகம் !

என்னை யார் வேடிக்கை
பேசினாலும் பொறுக்க மாட்டாய் !
நான் உன்னை வேடிக்கை
பேசினாலும் விரும்ப மாட்டாய் !
எந்த நேரமும் ஓயாது - எனை
வேடிக்கை பேசும் - இந்த
தனிமையினை கொஞ்சம்
வாய் மூடி இருக்க சொல்லடி !

கணவன் மனைவியாய்
வாழ்ந்து பார்த்து
அவசர படவில்லையடி நாம் !
குடும்ப வரவு செலவுகள்
நிர்வாகம் என - அதீத
அவசர பட்டவள் நீயடி !
ஓடும் இந்த வாழ்க்கைக்கு-என்
கால்களில் சக்கரம்
கட்டிவிட்டவள் - வழித்துணையாய்
அனுப்பி வைத்த தனிமை
என் பாதைகளில் கற்கள்
கொட்டி போவதை என்னவென்று
சொல்வதடி !

இப்போதும் பாரடி - நேரம்
போவது தெரியாமல் உனை
பற்றி எழுதி கொண்டே இருக்கிறேன் !
எல்லோரும் பொய் விட்ட
கணிணி ஆய்வு கூடத்தில்
நான் தனியாக இருப்பதாக
இந்த தனிமை உரக்க கத்துகிறது!
இன்னும் கொஞ்ச நேரம் போனால்
பசியை துணைக்கு அழைத்து
பத்து காதை நடை பயணத்தில்
பாதியிலே எனை வீழ்த்தி விடும் !

உன் செல்ல கோபங்களின்
அம்சமோ இந்த தனிமை !
இவ்வளவு நேரம் விடாது
திட்டியும் - என்னோடு
என் அறைக்கான பயணத்திற்கு
தயாராய் நிற்கிறது !

   - இந்த கடும் உறைபனியிலும்
     உனக்காக உருகி கொண்டிருக்கும்
     உன்னவன் !

Sunday, December 12, 2010

ரஜினி - என்றுமே ராஜா நீ !



சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
தமிழ் திரை உலகத்தின் முக்கியமான
 நட்சத்திரம் !என் குழந்தை பருவத்தில்
 நான் ரசித்ததில்லை இவரை 
இப்போது - நானும் எல்லோரையும் போல
இந்த காந்தத்தின் வட்டத்துக்குள் இருக்கிறேன் !
நடிப்பை மீறிய அவருக்குள் 
இருக்கிற மந்திர பொறிகள் - நெருப்பு விழிகள் - 
எல்லாவற்றுக்கும் மேலாக 
எளிமையின் சின்னமாக - யதார்த்தத்தின் 
அடையாளமாக விளங்குவதை 
மெச்சாமல் இருக்க முடியோமோ?
வெள்ளித்திரையை வெறும் 
வியாபாரமாக கருதாது 
தனக்கான பள்ளிக்கூடமாகவும் 
ஞானம் போதிக்கும் குருவாகவும் 
எண்ணுவதாலும் ,மிக முக்கியமாக 
தன் ரசிகர்களை எப்போதும் நெஞ்சில் 
நிருத்தியவராக இருப்பதாலும் 
இன்றும் அவரால் வெல்ல முடிகிறது !
ஹிந்தி திரை உலகம் நம்மை ஏளனமாய் 
அவ்வபோது பார்பதுண்டு - இன்று 
இந்த ரஜினியால் வாய் அடைத்து 
கொண்டு நிற்கிறது ! 

வாழ்வியலின் சாதகமில்லாத 
நிகழ்வுகள் - நம் நியாயம் பழிக்கப்படும் 
போது எழ நினைத்து - அடங்கி 
கொண்ட கோபங்கள் - பழி வாங்கும் 
உணர்வுகள் - கவலைகள் - இன்னும் சில
எதிர்மறை காரணிகள் தலைவர் ரஜினி 
ரசிகர்களிடம் கொஞ்சம் அல்ல நிறைய 
குறைவுதான் ! - நம் எல்லோருக்கும் சேர்த்து 
எல்லாவற்றையும் தன் திரை படங்களில் 
செய்து விடுவார் ! - ரஜினி படம் என்னை 
பொறுத்த வரை ஒரு ரகசிய 
உளவியல் சிகிச்சை !
சாத்திய கூறுகளை மறந்து விட்டு 
முழுதாய் ரஜினி படத்தை மகிச்சியோடு
 பார்த்தவன் -தான் தேக்கி 
வைத்திருந்த எதிர்மறை 
ரசாயன குழம்புகளை திரையரங்கத்தில் 
வடித்து விடுகிறான் ! - உலகம் 
ஆயிரம் குறைகள் சொல்லட்டும் 
உலகத்தரம் முத்திரை போடுபவர்கள் 
முகத்தை மூடிக் கொள்ளட்டும் 
நாம் நல்லதோர் தமிழனாய் 
இவரை ஆதரிப்போம் ! 
புத்திசாலித்தனத்தின் உச்சத்தில் 
இருப்பவரா நீங்கள் 
சரி ! தவித்து விடுங்கள் ! - அதற்காக 
ரஜினி உதவி தேவை படுகிற 
எங்களை போன்ற எளியோரை 
பரிகசிக்காதீர்கள் ! விஞ்ஞானத்தையும் 
மெய்ஞ்ஞானத்தையும் 
கூட்டி ரஜினியோடு சமன் 
செய்து கொள்பவர்கள் 
நாங்கள் ! - ஐன்ஸ்டீனை 
ஆண்டு கணக்கில் 
படித்து மூளை கொழுத்து 
யாருக்கும் உதவி 
இன்றி மடிந்தவர்கள் நிறைய உண்டு !
தலைவர் ரஜினி ரசிகனாய் இருந்து 
இதயம் கனியாது 
இருப்பர்வர் யாரும் இல்லை !


வாழ்க நின் புகழ் ! 

***** கொசுறு ***********************************
I had seen following comments somewhere in the facebook:

1. Do you know email id of google?
    It is : gmail@rajnikanth.com
2. Are you afraid of apocalypse(world disaster 2012)?
     Don't worry. Rajnikanth bought laptop with 3 years warranty. 

Let Rajni Rocks for many years.
Please feel proud to be a fan of him..!

***************************************************

Tuesday, November 9, 2010

வாழ்வின் முதல் பனி மழை



குழந்தையாய் - தூறலில்
நனைத்த சந்தோசங்கள்
காலத்ததின் படிவுகளால் 
தோண்டி எடுக்க வேண்டிய 
ஊற்று நீராய் - நேற்று வரை 

இன்றென்ன நிகழ்ந்து விட்டது 
அதிசயமாய் - கிடைத்தது 
பனி மழை அபிஷேகம்
எல்லா நிறங்களும் 
தங்கள் வேறுபாடுகளை 
விட்டு விடவோ - இப்படி 
வெள்ளை போர்வை போர்த்தி 
கொண்டாடுகின்றன ..!

மேக கூட்டங்களை 
மேலிருந்து ஊதித்  தள்ளியது 
யாரோ? - ஆடை 
போர்த்தப்பட்ட உடல் 
ஆசிர்வதிக்க படவில்லை 
என்றாலும் - காட்சியுற்ற 
கண்களும் , மென் பனி 
தீண்ட பட்ட முகத்தின் 
பாகங்களும் மோட்சத்திற்கு 
போவதற்கு முன் அனுமதி 
பெற்று விட்டன ..!

இயல்பு வாழ்க்கை 
பாதிக்கப் பட்டதாய்
அறிவிக்கப் பட்டது..!
என் இயல்பே வேரோடு 
பாதிக்கப் பட்டதை 
 யாரிடம் அறிவிப்பது ..! 

தோழர்கள் நாங்கள் 
மீண்டும் எங்களை 
குழந்தையாய் 
பிரசவித்து கொண்டோம்..!
கையில் திரண்ட 
பனி உருண்டைகள் 
அள்ளி ஒருவர் மீது 
ஒருவர் வீசி கொண்டோம்..!

ஆதி முதல் இந்த 
உலகம் வண்ணமாய் 
இருந்தாலும் - நாம் 
படித்த வரலாறுகள் 
கருப்பு வெள்ளை தானே..!
வரலாற்று ஓவியமாய் 
இந்த இருண்ட வானமும் 
வெண் பனி மூடிய வழிகளும்..!

உறைந்து விழுகின்ற 
மழையோ ? - அது 
என்னை உருக வைத்தது 
பிழையோ ? - ஏதோ அறுபட்டு  
விழுந்ததே - எனை 
பொம்மையென கட்டியிருந்த 
இழையோ ?

இந்த சின்ன சின்ன 
பனிக் கட்டிகள் 
மோதி - இப்படி 
சின்னா பின்னமாய் 
சிதறினேனே..!
யாரேனும் அள்ளி 
எடுத்துத்  தாருங்கள் 
அடுத்த மழையில் 
நான் சிதற வேண்டும் ..!

Friday, November 5, 2010

தீபாவளி

Diwali Graphics

சிறு உரசல் போதும்
தீக்குச்சி பற்றிக்கொள்ளும் ..!
கையளவு நெய் போதும்
மணிக்கணக்கில் - திரிகள்
சுடர் விடும் ..!
அழகு மணி விளக்குகள்
கோர்த்து வைத்தால்
வீடே ஒளி கொள்ளும் ..!

வாழ்வும் இது போலத்தான்
இன்று கூட நீ தோய்ந்து
கிடக்கலாம் - என்றேனும்
நிச்சயம் உரச படுவாய்..!
உன் இதயத்தில் - குழி
விழுந்த இடங்களில்
நம்பிக்கை ஊற்றி வை
ஆயத்தமாய் ..!
இந்த சின்ன அகத் தீயில்
குளிர் காய கற்று கொண்டால்
அணையாத உயிர் சுடர்
தேடும் தாகம் கொள்வாய் ..!

தீமைகளை தீர்த்து
விட்டதாய் - இருளை
கொளுத்தி  கொண்டாடும்
வெற்றி திருநாள்
இந்த தீபத் திருநாள் ..!

வரட்டும் திரு நாள்
வருடம் ஒருநாள் ! - நீ
ஒரே ஒரு முறை
அவதாரம் எடு - உனக்குள்
வெளிச்சம் விழுங்கி
கிடக்கும் சூரர்களை
வேட்டையாடு ..!
எல்லா நாளும்
திருநாள் இனி
உனைக்  கண்டால்
ஓடிடும் சனி ..!

Monday, November 1, 2010

என் வலைப்பூ




ஆயிர கணக்கான வலைபூக்கள் 

இணையம் எங்கும் கொட்டி கிடக்க 
எதற்காக இந்த வலைப்பூ ..?!

தத்துவங்களுக்காக இல்லை 
பொய்களை சொல்லி இதயங்களை 
கொள்ளையடிக்கவும்  இல்லை
எனை பறைசாற்றி கொள்ளவும் இல்லை 

கடந்த காலம் ஏற்றி வைத்த 
கனங்களை நிகழ்காலத்தில் 
சுமத்தி வருங்காலம் எனும் 
கனவு கோட்டைக்கு இத்துனை நாள்
வழி அனுப்பி வந்தேன் - நெற்றி 
கண் திறந்ததோ ? ஞான கண் 
திறந்ததோ ? தெரியாது !
இல்லாத கோட்டைக்கு - சுமை 
தூக்கி வருவதாய் ஓலை ஒன்று 
வந்தது ...................!
இனி என்ன செய்ய !
ஏற்றி வைத்த சுமைகளை 
இறக்கி வைப்பதன்றி !
இறக்கி வைப்பதன் சுகத்தை 
உங்களுக்கும் நான் 
உணர்த்திவிட்டால் - அன்று 
கிடைக்கும் எனக்கோர் 
உண்மை வெற்றி ...!
 
(எனவே ,,,,, இந்த வலைப்பூ)
சில நேரம் கொஞ்சம் எனக்காகவும் 
நிறைய என் தோழர்களுக்காவும் 
சில நேரம் நிறைய எனக்காகவும் 
கொஞ்சம் பிறருக்காகவும் 

எத்தனையோ வண்ண 
வலைப்பூஞ்சோலைகள் 
வேடந்தாங்கலாய் ...!
என் தொட்டதுக்கான வேலையோ   
இப்போதுதான் ஆரம்பம்..!

பிறகு,
என் கிறுக்குத்தனங்களை 
கிறுக்கல்களை ரசிக்கின்ற 
நண்பர்கள் இருக்கின்ற 
நம்பிக்கையில் - உள்ளத்துள் 
ஒழியாமல் வெளிவர 
துடிக்கின்ற மகிழ்ச்சியின் 
தூண்டுதலில் - நானும் 
தனிமையும் சந்திக்கின்ற 
வேளைகளில் - கணிணி
விசை பொத்தான்களின் வழி 
வலைப்பூச்செடிகள் நடுகிறேன்..!

இதய மேகங்கள் - இணைய 
வெளியினில் விதைகள் தூவ 
நிலம் , நீர் காற்றின்றி - உணர்வு 
கொண்ட நெஞ்சங்களில் நிகழ்ந்திடும்
அதிசய வேளாண்மை இது ..! 
பூத்துக்குலுங்கும் நாள் வரும் ..!

நான்கு சகோதரர்கள்

Sunday, October 31, 2010

ஒப்பனை

பெண்ணே நீ செய்துகொள்ளும் 
ஒப்பனையில் உன்னுடைய 
ஒரு மணி நேரம் தான் 
வீணாவதாய் நினைக்கிறாயா?

நீ வெளியில் புறப்பட்டது முதல் 
வீடு திரும்புகிற வரை - எத்துனை                             
ஆண்களின்  கண்ணில் 
விழுந்தாயோ - அத்துணை 
பேரின் ஒரு மணி நேரமும் தான்..! 

Tuesday, October 26, 2010

என்றோ எழுதி கசங்கியது



ஆதியில் அன்னையை சுற்றி வந்தேன்..!
தந்தையின் தோளில் தொத்தி கொள்வேன் ..!
தாத்தாவை மறக்க முடியுமா ? - அவர்
தலையில் ஏறிக்'கொல்வேன்' ..!
பட்டாம் பூச்சியாய் திரிந்தேன் ..!
ஆம் , வண்ண மலர்கள் கண்களை
மயக்கின--தோழர் கூட்டம்
ஆயிரம் பாடம் புகட்டியது ???


அன்னையின் அன்பை - அவசரகதியில்
பலமுறை கீழே கொட்டி விட்டேன்
தோய்ந்து போன என்
தந்தையின் தோள்களை கவனிக்க
மறந்தேன் ..???
கன்னியின் கடை கண் பார்வைக்காக
காத்து காத்து கிடந்தேன் ..!

கிடைத்தது மின்னல்களும் -அதை
சேமித்து வைக்கும் நுட்பங்களும்
ஒரே காதலை - இருவரும்
அடைகாத்தோம் தனி தனியாக ..!

உறவு சங்கிலியால் பிணைக்கப்பட்டு
அவளும் போனாள் அவள் அத்தானோடு
இதயத்தை கிழிக்காமல் தான் நுழைந்தாள்
போகும் போது அதை செய்து விட்டு போனாள்
திரும்பி பாத்தேன் - என்
அன்னை இன்னும் காதலித்து
கொண்டிருந்தாள் என் முழுமையையும் ...!


தாய் மடியை காட்டிலும் - ஏது உயர்வு ?
இப்போது நான் விடுதியில் ...
எப்போதாவது நான் - விருந்தாளியாய்
வீடு போவேன் ..!

அவளது வேலைகளை இடையுறு செய்து
ஒரு குழந்தையாய் அவள் மடியில்
தலை சாயும் நேரம் ...
ஆகா..! சொல்வதற்கு எந்த மொழியிலும்
வார்த்தை இல்லை ..!

ஈரேழு பிறப்புகள் எடுத்தாலும்
கிடைக்காது எனை பெற்றோர் போல்
ஆடுகின்ற சுதந்திரம் கொடுத்து
ஆட்டுவிக்கும் அதிகாரம் கொடுத்து
ஆனந்தப் படும் அன்பு உள்ளங்கள் ..!
எனக்கடுத்து - எனை சரியாக
புரிந்து கொண்ட ஒரே ஜீவன்கள்..!

என் காதலும் - காதல் பரிசான
கண்ணீரும் அன்னையின் அன்பு
ஓடையில் கலந்திட்ட தருணம்
உணர்வுகளின் உச்சியில்
ஓசைகளின் மௌனத்தில்
திளைத்தேன்..!
வாழ்வு ஓர் இலக்கியம்
இயல்பாய் அமைய வேண்டிய
இலக்கணம் - தெளிந்தேன்

உள்ள துள்ளலோடு தான்
ஒவ்வொரு அடியும் வைக்கின்றேன்
எனினும் வாழ்க்கை பாதையில்
பெருநடை போட்டோர் வழி மறித்து
கேட்டால் ஏனோ திரு திரு வென
விழிக்கின்றேன்-என்
மௌனமும் - பதிலும்
தவறென்று வாதிடுவோர்
முன்னிலையில் என்னதான்
உரைப்பதென்று..!

Monday, October 25, 2010

துபாய் அப்பா

தொலை தூர கானல்
தேசம் நீங்கள் இருப்பது ..!
தொலையாத உம நினைவுகளோடு
எத்துனை நாள் தனித்திருப்பது ...!

அப்பா என்று அடுத்த
வீட்டு பிள்ளை முனகிட
ஓடி வருகிறார் அந்த அப்பா ..!

நானோ அம்மாவுடனான என்
சண்டைகளில் ஓயாமல்
அலறுவேன் 'அப்பா! அப்பா!' என்று ..!

என்ன செய்ய - தொலை பேசி
வழி நீ பேசும் போது
அன்னையின் குறைகளை
அடுக்கதான்
முடிகிறது என்னால்..!

எங்கள் மீது கொண்ட
பிரியத்தில் நீங்கள்
பிரிந்து போனீர்கள் ...!

விடுமுறையில்
வரும் போது
சாக்லேட் , பொம்மைகளோடு
உங்கள் விழி ஓரத்தில்
நீங்கள் எடுத்து வரும்
கண்ணீருக்கு எதப்பா விலை ?

நலமோடு வாருங்கள் - எங்களுக்கு
நலம் கொண்டு வாருங்கள் ...!

- பிரியமுடன் உங்கள் பிள்ளை

காதல் எனும் தேவதை

தினமும் - என் கனவில்
சிறகுகள் மூடி
உறங்க வைக்கிற
தேவதை நீ

அறிவிப்பே இல்லாத
ஒருநாள் - இசைவாய்
நீ பறந்து வந்த நேரம்

மூடி கிடந்த - என்
ஜன்னலில்
மோதிக் கொண்டாய் ...!

கோபத்தின் உச்சிக்கு
மட்டுமல்ல - வானின்
உச்சிக்கும் போய்
வெண்ணிலவில் வாசம்
கொண்டாய் ...!

அன்றிலிருந்து - திறந்தே
கிடக்கிறது
ஜன்னலும் - என்
விழிகளும் ...!
(உன் வருகைக்காக)

Wednesday, October 6, 2010

சுவீடன் தேசத்து வாழ்வியல்

என் அருமை அன்னையை விட்டு
ஈராயிரம் மைல் கடந்து வந்தேன் !
பருவம் தாண்டி வந்து
காதல் தூண்டி விட்ட - கள்ளியை விட்டு
(வட) துருவம் தேடி வந்தேன் !
என்னவென்று தெரியாத உயிர் என்று
தோழர்காள் ! உங்களை சொல்லி வந்தேன் !
நீங்கள் எனக்காக பட்ட பாடெல்லாம்
பார்த்த பின்னர் - உங்களுக்கு நிகர்
ஆகுமோ என்னுயிர் ?
ஐயத்தோடு எண்ணுகின்றேன் !

தாய் நாடு விட்டு - தாய் மொழி
விழுங்கி , ஆங்கிலம் ஒழுக
நாட்கள் நகர்த்துகின்றேன் - இந்த
"சுவீட் (+) அன்"ன நாட்டினிலே ...!

புதிதாய் வந்த எவருக்கும்
சவால்களே வரவேற்பு செண்டுகள் !
தனித்து விடப்பட்டாலும்
தைரியமாய் திரியலாம் - பசுமை
கொழிக்கும் வீதி எங்கும் !
முகம் சுழிக்காத உதவிகள் !
முழு மூச்சான புன்னகைகள் !
எவருக்கும் இதயம் லேசாகி போகும் !

இவனுக்கென ஏற்பாடுகள்
செய்து வைக்க - வறுமையில் உழன்ற
இப்படி ஓர் இந்தியன் - இங்கு
வருவான் என்று யாருக்கு தெரியும் ?!
தாவர எரிவாயுவில் ஓடும்
பேருந்துகள் - தொடர்ந்து பயணித்தால்
எரிபொருளினும் வேகமாய்
எரிந்துவிடும் - என்
பெட்டகத்து பணம், பொருள் !

வெகு சீக்கிரம் தொடங்கி விடுகிற
வகுப்புகளால் தவறி போகும்
விரதம் முறிக்கும் (Break fast)
காலை சிற்றுண்டி ...! - கவலை இல்லை !
பசி மோசமாய் கிள்ளினால் - பாதை
ஓரத்து ஆப்பிள் மரங்களிடம்
மன்னிப்பு கேட்டு கொண்டு - முற்றிய
கனிகளை கிள்ளிக் கொள்வேன் !

கல்லூரி வரை போகும் "கால்நடைக்கான"
குறுக்குப் பாதை "காட்டு வழி" ! - வந்த
நாளே அதற்கு வரைபடம்
வழங்கிட்ட இந்நாட்டரசு வாழிய நீடுழி !
நீண்ட நாள் புதைந்து கிடந்த
ஆனந்த பொக்கிசத்தை - அகழ்ந்து
வெளியில் எடுத்தன - அழகை
அப்பிக்கொண்ட கானகத்து
வனப்புகள் !

கார்பன் திணறடிக்கும் ரோட்டை விட்டு
பிராணன் நிரம்பி கிடக்கும்
காட்டு வழியில் - தொலை பேசியின்
பாடல் குவியல்கள் - செவி
உணவூட்ட - தினமும்
நோகாமல் பத்து காதை பயணம் !
"இந்த தேசத்தில் வீணாய்
எதற்காக பூக்கிறாய் ? - என்னோடு வா
என் தேசம் போகலாம் " என்றேன்
வழி நெடுகும் குலுங்கும் பூங்கூட்டத்திடம் !
"எதற்காக ?" என்றன பூக்கள்.
" வெறும் சாகும் சாபம் வாங்கி வந்து
இங்கு முளைத்தீர்கள் ! - நளினம்
தோய்ந்த தெய்வ மகளிர்
கையில் சாகும் வரம் வேண்டாமா ?" என்றேன் !!!


(இன்னும் .. பிறவும்
மௌன வெளியில் வார்த்தைகள் தேடி
போயின - திரும்பி வரட்டும் !)

** ஏக போக வாழ்க்கை ஈதில்லை
எனினும் இயற்கையோடு
இயைந்த வாழ்விது!
போக "போக" புளித்திடும் பால்
வேண்டாம் எனக்கு !
ஒரு மிடறு தான் எனினும்
ஊற ஊற இனித்திடும் தேன்
வேண்டும் எந்நாளும்!

என் இதயத்தின் வருகை பதிவேடு


என் இதயத்தின் வருகை பதிவேடு



2161070 01 - "தமிழ் தெரசா"
காட்டிய கருணை மழையில்
'கணக்கு - வழக்கு' இல்லாது
நனைதோம் [she was our accountant]

2161070 02 - "அகமது" குளிர - ஆயிரம்
விசயங்கள் பகிர்ந்து
 குலாவினோம்...!


216107 03 - "தேவி மகாலெட்சுமி" யின்
அருள் குடை நிழலில்
எப்போதும் அமர்ந்து
இளைப்பாறினோம்..!


2161070 04 - "சாலி" கிராமத்தில் வாழும்
தமிழ் திரை நடிகர்கள் போல்
வேடிக்கை செய்து
விளையாடி களித்தோம்...! [Dump-Sharath]


2161070 05 - "சுந்தர" தெலுங்கோடு
சுகந்த தமிழ் கலந்து
பரிமாறிக் கொண்டோம்...!


2161070 06 - "மாதவி" பொன் மயிலாள்
போதித்த கற்பு நெறிதனை
நட்பின் மீது எழுதி
ஒட்டிக்கொண்டோம் ..!


2161070 07 - "புஷ்பா" 'அபிசேகத்தில்'
கூடுகின்ற புண்ணியம்
யாவும் - யாவரும்
கிடைக்கப் பெற்றோம் ..! [She is famous for cracking and teasing everyone]

2161070 08 - "விஜய பிரியா" வின்
கரகர பிரியா "அரங்கேற்ற "
நாளில் - நம்முள் நிகழ்ந்த
நட்பின் விஜயம் - என்றும்
பிரியா எனக் கண்டோம் ...! [She tried to impress the seniors in the intro session with her song]


2161070 10 - "ஷாலினி" பேபி எனும்
குழந்தை நட்சத்திரம்
நம்மோடு தவழ்ந்து
"வி(ள்)ளையாட" கண்டோம் ..! [Her voice still like a baby]


2161070 11 - "கார்த்தி(க்)"கை மாதத்து
 பின்னிரவு மழை பாடும்
"தாலாட்டில்" - இன்ப
"நித்திரை" கொண்டோம் ...!
{நம் மூவைந்து தோழர்களில் பேசும் பொது நாவை அதிகமாய் சுழற்றுவது
கார்த்திக் என்று எத்துனை பேருக்கு நினைவு இருக்கிறது ..! }

2161070 12 - "ஜெயந்தீ" மூட்டி - அதில்
கோபம் கொட்டி எரித்து
 மூண்ட அன்பு
தணலில் - கோர்த்து
கைகள் நீட்டினோம் ...!


2161070 13 - "பெரமநாத" அய்யன்
எல்லையில் முறுக்கி
நின்று செய்கின்ற - ஊர்
"காவல் பணியதனை "
உங்களுக்காய் செய்திட்ட
ஒரு ஜீவன் கண்டிட்டோம்..! [Class Representative , Placement Representative]

2161070 14 - "பத்மா" படர்ந்த
குளத்தில் - துள்ளி
குதித்தாடும் மீன்கள் போல்
வாழ்ந்த நாம் - சிறுநனி
ஏனோ "பட்டும் படாமல் "
இருந்து கொண்டோம் ..!


2161070 15 - "சுகுணா" சிக்கன் - மணக்கும்
மதிய சாப்பாட்டு பெட்டியில்
முழு கோழி பிடிக்கும்
பந்தயம் நிகழ்த்தினோம் ..! [She brings best home made food]


2161070 16 - "கல்பனா" என்றதும்
 சாவ்லா எனும் நாக்கு,
 மெச்சும் அறிவோடு
 படித்திட்ட - மென்மையான
மேதையினை கண்டு - பெரும்
சவால்  என சொல்லக் கண்டோம் ..! [Gold medalist of our batch]


ஓரைந்து நாட்கள் போல்
    இமைபோதில் ஓடிவிட்ட
ஈரைந்து மாதம் சுமக்கின்ற
    வயிற்றை போல் வலிக்கின்ற
மூவைந்து தோழர்கள்
    ஒன்று கூடி வாழ்ந்திட்ட
நாலைந்து மாதத்து - இன்ப
    வாழ்வு தொலைந்தது காண்.!

நினைவுகளுடன் ,
--பெரமநாதன் சத்யமூர்த்தி.