Sunday, April 4, 2021

அகலா விளக்கு




நெஞ்சம்

சுடர்விட ஏங்கும்

நெய் இழையிட்ட

அகல் விளக்கு!


‘பொறி’யென

கண்கள்

உரசி பற்றிக்

கொண்டதும்

இணை நெஞ்சங்கள்

வேண்டுவது 

அன்பெனும் 

அகலா விளக்கு!


         - பெரமு

அவனும் அவளும்

 

அவள்: முத்தம் யாதோ?


அவன்: 

பேரன்பின் 

மென்மையான

பேரழுத்தம்!


அவள்: கன்னத்து குழி எதற்கோ?


அவன்: 

அன்பு ஊடல் பிரிவால்

உவர்ந்தோடும் கண்ணீர்

அன்பின் மீள் வருகையால்

களிப்புற்று 

உவப்பெனும் உவகைநீராகி 

அடுத்து தோன்றிடும்

நாணத்திற்கு செஞ்சாந்து குழைத்திட!


      - வெற்றியன்பன்(Jai’s Beloved) பெரமு