இலினக்சு

இலனக்சு இயங்குதளத்தில்  தமிழ் விசையை எப்படி நிறுவுவது ?

  1. முனையத்தை திறந்து தேவையான பொதிகளை நிறுவ கீழ்க்கண்ட கட்டளையை இடுக
    sudo apt-get install m17n-db m17n-contrib ibus-m17n ibus-gtk
    உங்கள் கடவுச்சொல்லை இட்டபின் பொதிகள் வெற்றிகரகமாக நிறுவப்பட்டுவிடும்
  2. கணிணியை மறுஇயக்கம் செய்க
  3. அமைப்புகள் > எழுத்து உள்ளீடு அல்லது System Settings > Text-Entry தேர்வு செய்க 
  4. விசைப்பலகை வடிவமைப்பைச் சேர்க்க "+" குறியை அழுத்தி கீழ்க்கண்ட விசைப்பலகைகளை நிறுவிக்கொள்ளவும்                                                   * Tamil(phonetic(m17n)), Tamil(tamil99(m17n))
  5. Tamil99 பயன்படுத்துவதை வல்லுநர்கள் சிறப்பென குறிப்பிடுகிறார்கள். அதன் எளிமையும், அழுத்தவேண்டிய விசைகளின் எண்ணிக்கை, ஒலிப்புமுறை உள்ளீட்டைவிட குறைவாக இருப்பதுமே காரணம். காண்க [http://tamil99.org/]          
  6. ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற {Super}+{Space} என்ற விசைத் தொகுப்பை அழுத்தவும்



No comments: