Tuesday, January 25, 2011

தொழில் நுட்ப ஜீ பூம்பா - பிரணவ் மிஸ்ட்ரி


















ஆறாம் அறிவு தொழில் நுட்பத்தை
அறிமுக படுத்திய ஆசாத்திய
இந்தியன் - பிரணவ் மிஸ்ட்ரி.
இந்திய தொழில் நுட்ப பல்கலைகழகத்தில்
படிப்பை முடித்து விட்டு , பிறகு பில் கேட்ஸ்
நிறுவனத்தில் ஆராய்ச்சியாளனாக இருந்தார்.
தற்போது MIT ல் Phd செய்து கொண்டு இருக்கிறார் 

தன்னுடைய கண்டுபிடிப்புகளை மேடை
ஏற்றிய பொது அவர் விவரித்த கற்பனைக்கு
எட்டாத யோசனைகளை இந்த காட்சி
கோப்பில் காண முடியும்  



இது சாத்தியமா இல்லையா , கூடுமோ கூடாதோ
என்றெல்லாம் சந்தேகம்  இவருக்கு தோன்றாது
போலும் ! இயந்திரகளை  எப்படி இயல்பான
வாழ்வோடு எடுத்து செல்வது என யோசித்தார் !
இன்று அதில் முழு வெற்றியும்
அடைந்து விட்டார் !

கழுத்தில் தொங்கும் ஒரு சிறு கேமரா
தொழில் நுட்பத்தில் இயங்கும் இவரது கருவி
செய்யும் சித்து வேலைகள் அளவில்லாதவை !

பட்டிணத்தில் பூதம் என்று ஒரு பழைய
படம் உண்டு. அதில் ஜீ பூம்பா என்பவர்
நாகேசுக்கும் , ஜெய் சங்கருக்கும்
செய்தி தாளிலே படம் காட்டுவார் !
அது சாத்தியமா ?
நம்ம பிரணவ் அதை செய்து
காட்டும் ஜீ பூம்பா தான் !
மேலும் தனது கண்டு பிடிப்பை எல்லோரும்
பயன்படுத்தும் வண்ணம் Open Source ஆக
வழங்கி உள்ளார். முன்னாள் குடியரசு தலைவர்
இந்த தொழில் நுட்பம் பாபா ஆய்வு கூடத்திற்கு
தேவை படும் என பாராட்டி இருக்கிறார் !

அமெரிக்கா வில் ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கும் இவர் - இந்தியாவிற்கு
திரும்பும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து
இருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம் ! 



இந்த ஆறாம் அறிவு எப்படி சாத்திய பட்டது !
இயற்கையிடம் கேட்டால்
கிடைக்காதது இல்லை !
ஆம் ! கணிணி துறையில் நீண்ட
நாளாக கிடப்பில் கிடந்த இயற்கை சார்ந்த
கணிணி ஆராய்ச்சி மீண்டும்
தூசி தட்டப்பட்டது கடந்த பத்தாண்டுகளில் !

1950 களில் இந்த துறை சார்ந்த
ஆய்வுகள் பல பாதியிலேயே
கை விட பட்டது - இன்னும் சில
ஆய்வுகளுக்கு பொருள் உதவி
கிடைக்கவில்லை !
மேலும் கணக்கீடுகளை துரிதமாக
 துல்லியமாக கணிக்கும்
கணினிகள் இல்லை !
மாதிரி வடிவங்கள் வரைகின்ற
தொழில் நுட்பமும்
இல்லை ! - இப்படியாக
நித்திரை கொண்ட இந்த
பிரிவு - இன்றைக்கு கைவசப்பட்ட
எல்லா தொழில் நுட்பங்களையும் ,
அறிவியலின் எல்லா பாட
பிரிவுகளில் இருந்தும் அறிவு
கடன் வாங்கியும் விழித்து கொண்டது !

போதும் போதும் என்கிற அளவிற்கு அன்றே
பல ஆய்வாளர்கள் பல Algorithm களை எழுதி
விட்டனர் ! - அதில் பரவலாக எல்லோராலும்
அறிய படுவது

 DNA Pattern மாட்சிங்
(உயிர் சுருளி வரிசை பொருத்தம்
- சிரிகாதிங்க என்னுடைய தமிழ் சேவை )
மற்றும் Neural Networks
(மூளை நுண் நரம்பு வலைகள்)
அதை தாண்டி இன்னும் 
எத்தையோ இருக்கின்றன !
எல்லாமே இயற்கையிடம் 
இருந்து திருட பட்டவை !
அதை கௌரவமாக Nature-Inspired என்று 
சொல்லுவார்கள் ! 
நீங்கள் கூட இயற்கையின் 
எதோ ஒரு அம்சத்தை 
வைத்து , (உ ம். நாய் எப்படி குரைக்குது ,
 பிரட் ல எப்படி வெண்ணை தடவி சுடுவது)
அதற்குள் பொதிந்து கிடக்கும்
விசயங்களை கணிதமாக 
விவரிக்க முடிந்தால் - நாளை 
உங்கள் பெயரில் ஒரு Algorithm (படி முறை )
அல்லது அதன் அடிப்படையில் 
இயங்கும் ஏதேனும் ஒரு கருவியை 
தயாரித்து விட முடியும் ! 







பின்னொட்டு : எந்திரனில் விவரிக்க பட்ட 
தொழில் நுட்பங்களில் பல Artificial Intelligence ன்
உப பிரிவான Computational Intelligence 
முறைகளில் ஒன்றான 
Artificial Neural Networks or Perceptron (1957)
அடிப்படையில் அமைந்தது !
(கிட்ட தட்ட 50 வருடங்கள் மேல்
ஆகியும் படத்துல தான் இந்த 
எந்திரனை பார்க்க முடிகிறது ! - இயற்கை 
இன்னும் சவாலாக தான் இருக்கிறது 
முழு வெற்றி கிடைக்க விட்டாலும் 
இந்த மாதிரியான ஆராய்சிகள் 
கண்டிப்பா நன்மை பயக்கும் )
தகவல் தந்தமைக்கு 
என்னுடைய Machine Learning
ஆசிரியர் ஒல்லே கேல்மோ 
அவர்களுக்கு நன்றி ! 



Sunday, January 9, 2011

கல்கியின் சிவகாமியின் சபதம்

பன்னிரு ஆண்டுகளாக கல்கி வார இதழில்
வெளிவந்த இந்த தொடர்,நாவலாக பின்னர்
வெளியிடப்பட்டது.

முதலாம் மகேந்திர வர்ம பல்லவன்
காலத்தில் காஞ்சியில் நிலவிய
போர் சூழல்களை விவரிக்கிறது இந்த நாவல்.

தமிழ் கடலின் கரையில் அமர்ந்து
இளைப்பாற வாருங்கள்! எதிர் காலத்தோடு
திருகி விழுந்திட்ட எண்ணங்களை
உதிர்த்து விட்டு - மாண்பு மிகு நம்
தமிழ் பண்பாட்டை ஒய்வு நேரங்களில்
வாசித்திட - இழந்துவிட்ட நம் அழகு
பண்பாட்டில் வசித்திட - வாசியுங்கள்
இந்த நாவலை !

பாகம் ஒன்று - பூகம்பம் (அ) பரஞ்சோதி யாத்திரை


பாகம் இரண்டு - காஞ்சி முற்றுகை

பாகம் மூன்று - பிக்ஷுவின் காதல்


பாகம் நான்கு - சிதைந்த கனவு