நான் ஒரு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு குசும்பு புலவனாய் பிறந்து இருந்தால் , அப்போது யாரேனும் வந்து உன் முகவரி என்ன கேட்டு இருந்தால் இப்படி சொல்லி இருப்பேன். அப்போதும் நம் நாடு , இப்போது உள்ளது போல் மக்களாட்சி நாடாக , இதே சட்டம், அரசியல் நிர்வாகத்தோடு இருந்ததாக கற்பனை செய்து கொள்வோம்.
முகவரி இதோ :
மாநாட்டுக்குள்ளே ஒரு "செம்மொழி நாடு" !
அந்த நாட்டுக்குள்ளே ஒரு சோழன் "ஊர்" !
அந்த ஊருக்குள்ளே பட்டு போல ஒரு "கோட்டை" !
அந்த கோட்டை தலைக்கு மேலே
அழகாய் இருக்கிறது எங்கள் "குடி" !
முடிந்தால் என்னை அங்கு கண்டுபிடி !
(புரியல இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா ?)
மூன்று திசைகளில்
அலைகடல் விளையாடும்
பழம்பெரும் நாட்டில்
பெரிய நிலமாய் - ஒரு
செம்மொழி "நாடு" !
அந்த நாட்டுக்குள்ளே
பெரிய வட்டமாய் - ஒரு
சோழன் "ஊர்" !
அந்த ஊருக்குள்ளே
வட்டமாய் - பட்டு போல
மின்னும் ஒரு "கோட்டை" !
அந்த கோட்டையின்
தலைக்கு மேலே-அழகாய்
இருக்கிறது எங்கள் "குடி" !
பெரிய நிலம் = மாநிலம்
பெரிய வட்டம் = மாவட்டம்
தலைக்கு மேல் = சிரமேல்
முழு முகவரி( கீழிருந்து மேலாய்):
இந்தியா,
தமிழ்நாடு ,
தஞ்சாவூர் மாவட்டம்,
பட்டுக்கோட்டை வட்டம்,
சிரமேல்குடி.
பூமி பிறந்து சுமார் 450 ஆண்டுகள் கழித்து , சில மாதங்கள் , சில நாட்கள் , சில நிமிடங்கள், சில நொடிகள் கழித்து ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அன்று நாட்காட்டி ஒன்று ஜூலை 17 , 2009 ஒன்பது என்றுக் காட்டிக் கொண்டிருந்தது.