Saturday, February 6, 2021

பணியிடை பனிநடை

 


உலகஞ் சுற்றி பகலவன்

உச்சந் தொடுவானில் உருகும்

நட்ட நண்பகல் - கொட்டி முழக்கி

நெஞ்சச் செவிக்கு செய்திவிடும்:

“வா! வெளியே வா!

உலவா! உலவ வா!

வெண்பனிச் சுமை மூடிய வழிகள்

தலைப்பணிச் சுமையால் மடங்கிய

உன் கால்களுக்கே!

ஏற்ற உடையுடுத்தி ஏறுபோல் வா!”


எதிர்மறை வெப்பநிலையில் - கண்

எதிரே மறையும் துருவத்து மீனோடு

துரும்பு மீன் நானும் துள்ளல் நடை

நாள்தோறும் இடுவேனே!

உடல் உளம் பேணிட சூளுரையே இது!


                   - பெரமு