நெஞ்சம்
சுடர்விட ஏங்கும்
நெய் இழையிட்ட
அகல் விளக்கு!
‘பொறி’யென
கண்கள்
உரசி பற்றிக்
கொண்டதும்
இணை நெஞ்சங்கள்
வேண்டுவது
அன்பெனும்
அகலா விளக்கு!
- பெரமு
நெஞ்சம்
சுடர்விட ஏங்கும்
நெய் இழையிட்ட
அகல் விளக்கு!
‘பொறி’யென
கண்கள்
உரசி பற்றிக்
கொண்டதும்
இணை நெஞ்சங்கள்
வேண்டுவது
அன்பெனும்
அகலா விளக்கு!
- பெரமு
அவள்: முத்தம் யாதோ?
அவன்:
பேரன்பின்
மென்மையான
பேரழுத்தம்!
அவள்: கன்னத்து குழி எதற்கோ?
அவன்:
அன்பு ஊடல் பிரிவால்
உவர்ந்தோடும் கண்ணீர்
அன்பின் மீள் வருகையால்
களிப்புற்று
உவப்பெனும் உவகைநீராகி
அடுத்து தோன்றிடும்
நாணத்திற்கு செஞ்சாந்து குழைத்திட!
- வெற்றியன்பன்(Jai’s Beloved) பெரமு
வெளியே போக முடியாதபடி
இடி மின்னலுடன்
கொட்டும் மழையை திட்டுகிறாய்!
வெளியே போக தோணாதபடி
மின்மினி கண்கள்
குழலின் குரலுடன் - அறைக்குள்
கொட்டும் உன் அன்பு மழையை
கையில் கிட்டிய குடையை
தலைகீழ் பிடித்து
சேகரித்து கொண்டிருக்கிறேன்!
பேரொலியும் பேரொளியும்
என் கவனம் ஈர்க்காதபடி
எப்படி நீ கட்டிப் போடுகிறாயோ!
- உனதன்பன் பெரமு
நிலவு நிமிரும் மேலைத்திசையில் இருந்து
அவள் வருவாள் எனத் தனித்து
உலவுக் கதிரவன் இறங்கும் கீழைத்திசையில்
வழிமேல் கூர்ந்த விழி ஒற்றி
வாடைக் குளிர் வீசும் வடக்கு திசைக்கு
கத்திக்கும் காட்டா புறமுதுகு காட்டி
ஓடைக் குளித்த தெற்குத்திசை தென்றலுக்கு
முகம்காட்டி இருக்கின்றேன் யான் ஆவலில்
- பெரமு
உலகஞ் சுற்றி பகலவன்
உச்சந் தொடுவானில் உருகும்
நட்ட நண்பகல் - கொட்டி முழக்கி
நெஞ்சச் செவிக்கு செய்திவிடும்:
“வா! வெளியே வா!
உலவா! உலவ வா!
வெண்பனிச் சுமை மூடிய வழிகள்
தலைப்பணிச் சுமையால் மடங்கிய
உன் கால்களுக்கே!
ஏற்ற உடையுடுத்தி ஏறுபோல் வா!”
எதிர்மறை வெப்பநிலையில் - கண்
எதிரே மறையும் துருவத்து மீனோடு
துரும்பு மீன் நானும் துள்ளல் நடை
நாள்தோறும் இடுவேனே!
உடல் உளம் பேணிட சூளுரையே இது!
- பெரமு