Sunday, April 4, 2021

அவனும் அவளும்

 

அவள்முத்தம் யாதோ?


அவன்

பேரன்பின் 

மென்மையான

பேரழுத்தம்!


அவள்கன்னத்து குழி எதற்கோ?


அவன்

அன்பு ஊடல் பிரிவால்

உவர்ந்தோடும் கண்ணீர்

அன்பின் மீள் வருகையால்

களிப்புற்று 

உவப்பெனும் உவகைநீராகி 

அடுத்து தோன்றிடும்

நாணத்திற்கு செஞ்சாந்து குழைத்திட!


      வெற்றியன்பன்(Jai’s Beloved) பெரமு

No comments: