Friday, March 5, 2021

அடடே அன்பு மழை


வெளியே போக முடியாதபடி

இடி மின்னலுடன் 

கொட்டும் மழையை திட்டுகிறாய்!


வெளியே போக தோணாதபடி

மின்மினி கண்கள் 

குழலின் குரலுடன் - அறைக்குள்

கொட்டும் உன் அன்பு மழையை

கையில் கிட்டிய குடையை

தலைகீழ் பிடித்து

சேகரித்து கொண்டிருக்கிறேன்!


பேரொலியும் பேரொளியும்

என் கவனம் ஈர்க்காதபடி

எப்படி நீ கட்டிப் போடுகிறாயோ!


      உனதன்பன் பெரமு

அன்பு செய் அந்தி


 

நிலவு நிமிரும் மேலைத்திசையில் இருந்து

    அவள் வருவாள் எனத் தனித்து

உலவுக் கதிரவன் இறங்கும் கீழைத்திசையில்


    வழிமேல் கூர்ந்த விழி ஒற்றி


வாடைக் குளிர் வீசும் வடக்கு திசைக்கு


    கத்திக்கும் காட்டா புறமுதுகு காட்டி


ஓடைக் குளித்த தெற்குத்திசை தென்றலுக்கு


    முகம்காட்டி இருக்கின்றேன் யான் ஆவலில்


                                     - பெரமு